மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) பிற்பகல் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here