இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வரி விதிப்புக்குப் பின்னர், நாட்டின் உள்ளூர் வாகன சந்தையில் எந்தளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் ரூபாய் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் 1200 சிசி ஹைப்ரிட் வாகனம், வரி விதிப்பின் பின்னர், இலங்கையின் உள்ளூர் சந்தையில் சுமார் 16.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹொண்டா வெசல் எக்ஸின் விலை ஜப்பானில் 8.8 மில்லியன் ரூபாய் என்ற நிலையில், வரி விதிப்புக்குப் பின்னர், இலங்கையில் 21 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் டொயோட்டா ஹிலக்ஸ் ஜிஆர் ஸ்போர்ட்டின், இறக்குமதி செலவு 15 மில்லியன் என்ற நிலையில், இலங்கையில் அது சுமார் 32 மில்லியனுக்கு விற்கப்படுகிறது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 250, வாகனம் 18 மில்லியன் ரூபாய்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, வரிக்கு பின்னர் இலங்கையில் 65 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here