பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தாத குற்றத்திற்காக WM Mendis டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இன்று இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற்வரியை மோசடி செய்தமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.








