விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் இன்று பிரதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் கையளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோ, வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரட்ச்சந்திர மற்றும் வவுனியா அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வாலிபால், நெட்பால், கபடி, கராத்தே, பூப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற அனைத்து உள்ளரங்கு விளையாட்டுகளையும் பூர்த்தி செய்யும் வகையில் முழுமையான உள்விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.

25 மீற்றர் நீச்சல் தடாகமானது வவுனியா மாவட்டத்தின் முழுப் பாடசாலை மாணவர்களுக்கும் முக்கியமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here