வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.








