வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (22/04/2025) இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிஸார் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 30 போத்தல் சட்டவிரோதசாராயத்தை கைப்பற்றினர்.

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here