வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று (12/03/2025) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா வைத்தியசாலை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here