உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக நின்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதால் பொது மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சிமன்றங்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன் தங்களுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக மாநகரசபை,தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட பல வட்டாரங்களில் இந்தநிலமை ஏற்ப்பட்டுள்ளதுடன் ஏனைய சபைகளுக்கு முன்பாகவும் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here