ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியின்போது அரச அச்சகத்துக்கு அதிக பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய அரச அச்சக வளாகத்தில் 65 பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 300க்கும் மேற்பட்ட வேலைகள் அரச அச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் இந்த நாள்களில் அச்சிடப்படும் எனவும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஏனைய அச்சுப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.








