இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார வாக்குமூலம் வழங்கி வருகிறார்.
தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடி தொழிலுக்காக நாட்டிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் E8 விசா ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
இது தொடர்பாகத் தாம் கைது செய்வதற்கு முன்னதாக முன்கூட்டிய பிணைக்கான மனு ஒன்றை முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த மனு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத்தயார் என அவரது சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.








