முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வாடகை வாகனப் பயணச் சேவைகளையும் ஒழுங்குமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

இன்று (30) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, இந்தச் சேவைகளுக்கான தரவு சேகரிப்பு நடவடிக்கை நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதே நோக்கமாகும். மேலும், வாடகை வாகனத் தொழிலாளர்களுக்காக அரச சார்பற்ற போக்குவரத்துத் தொழிலாளர் சபை ஒன்றை நிறுவும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதுகுறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்ததாவது, தரவு சேகரிப்பிற்காக அரச நிறுவனங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் சிறப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். அவற்றில் வழங்கப்படும் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தகவல்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here