நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,983 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 41,394 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here