விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை உருவாக்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு சிறப்பு குழுவொன்றை நியமித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இக்குழுவை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நியமனம், விசேட வைத்திய நிபுணர்களைச் சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் நேற்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய சேவைச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குழுவில் உறுப்பினர்களாக—
• பணிப்பாளர் நாயகம் (வைத்திய சேவைகள்) வைத்தியர் அர்ஜுன திலகரத்ன
• பிரதிப் பணிப்பாளர் நாயகம் (வைத்திய சேவைகள் II) வைத்தியர் சமித்தி சமரக்கோன்
• சட்ட அதிகாரி வைத்தியர் சாமிந்திகா ஹேரத்
ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வரவிருக்கும் 2026 ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் சேவைச் சட்ட வரைவைத் தயார் செய்து சமர்ப்பிக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.








