நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் இந்த படம் காலை 4 மணி ஷோவாக ரிலீஸான நிலையில் ரசிகர்களும் அங்கு சென்று இந்த படத்தை என்ஜாய் செய்ததை காணக்கூடியதாக உள்ளது.
படம் பார்த்து ரசிகர்கள் மிகப் பெரிய உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். படம் விஜய்க்கு மிகப்பெரிய ஃபேர்வெல் பார்ட்டியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்துடன் சேர்ந்து பார்க்கும் போது யுவன் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன. மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் கேரக்டர் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் சிவகார்திகேயன் அடுத்ததாக அவரது நடிப்பில் அமரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








