சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அதற்கான ஒரு தீர்வாக குறித்த மாதத்திற்கான பருவச் சீட்டைப் பயன்படுத்தி அம்மாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ்களில் பயணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சபையின் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here