தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மத்தளவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த வேனின் டயரில் காற்று இறங்கியதன்  காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் வேனில் பயணித்த மூன்று குழந்தைகள் படுகாயமடைந்து, எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.

கதிர்காமம் ஏழுமலை பகுதியைச் சேர்ந்த 02 வயதும் 02 மாதமுமேயான குழந்தையே இவ்வாறு மரணித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற போது வேனில் சிறுவர்கள் உட்பட 12 பேர் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here