கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினத்தை இன்று வெள்ளிக்கிழமை (27) பிரமாண்டமான முறையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கொண்டாடியுள்ளது.
அந்தவகையில், இவ் ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் “அமைதிக்கான சுற்றுலா” என்பதாகும்.

உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் மதுபானி பெரேரா, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் ஹரீந்திர விஜேவர்தன மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக முகாமையாளர் வசனா குமாரி ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதனையடுத்து , கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஊழியர்கள் அன்புடன் வரவேற்று அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி வைத்துள்ளனர்.









