கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஓய்வுபெற்ற விமானப்படை விமானி ஒருவர் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது அவரது கைப்பையில் இருந்து T-56 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
37 வயதான இவர், மாலை 05.45 மணிக்கு டுபாய்க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-225 இல் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த போது, விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








