வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை 12:15க்கு எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு பொலிஸாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு தர்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர்களில் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் இருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு முச்சக்கர வண்டியில் பொலிஸார் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர்களில் இருவரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here