இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும், வியட்னாம் தூதுவரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

குறிப்பாக இரு நாட்டுக்கும் இடையில் பௌத்த மதம் மற்றும் கலாசாரத் துறைகளில் காணப்படும் தொடர்புகள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்ற இராஜதந்திர உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை –வியட்னாம் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை ஸ்தாபிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதிக உற்பத்தித் திறன் கொண்ட முறையில் விவசாயத் துறையைப் பயன்படுத்துவதன் ஊடாக வியட்னாமில் மேற்கொள்ளப்படும் உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் கௌரவ சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here