திவுலபிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திவுலபிட்டிய நைவல தோட்டத்தில் நேற்று (05.10) வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நைவல தோட்டம் வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






