வென்னப்புவ பகுதியில் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ, வேவா வீதிப் பகுதியில் நேற்று காவல் நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, சிற்றூர்ந்தில் பிரவேசித்த மர்ம நபர்களால் பொதுமகன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபருடன் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.







