சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, தற்போது ஒரு பெரிய வெற்றிலை 10 ரூபாவுக்கும், ஒரு சிறிய வெற்றிலை 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

விலை அதிகரிப்பு வெற்றிலை மட்டும் அல்லாது பாக்கினையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விலை உயர்வால், பொதுமக்கள் வாங்கும் அளவு குறைந்ததால், வெற்றிலை மற்றும் பாக்கு விற்பனையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் உயர்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும், இது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பெரும் சுமையாக மாறும் எனவும் விற்பனையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here