வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
அதன்படி, வெலிகம தலைமையகத்தின் பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.








