கொஸ்லந்தை, பூனாகலை – வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த வனப்பகுதி ழுழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது.
இதனால் வனப்பகுதி அதிகளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீப் பரவல் இன்று திங்கட்கிழமை (26) காலை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








