முறைகேடான உப்பு பொதியிடல் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் லங்கா சோல்ட் நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்னாயக்க முதியான்செலாகே குணரத்னவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கைது செய்தது.

முறையான கொள்முதல் நடைமுறையின்றி மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டளையால் அரசுக்கு சுமார் ரூ. 14.3 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாகவும், கொள்வனவு செய்த நிறுவனத்துக்கும் நியாயமற்ற இலாபம் கிடைத்ததாகவும் தொடரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா சோல்ட் நிறுவனம் அரச மற்றும் தனியார் இணைந்து நடத்தும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here