ரம்புக்கனை ஹிரிவடுன்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  நபர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும்  குறித்த சந்தேக நபர் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் எனவும்  விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here