உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

எனவே உப்பு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அனுமதிப் பெற்ற எந்தவொரு இறக்கமதியாளரும் உப்பை இறக்குமதி செய்ய முடியும் என உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்தார்.

அத்துடன் அயடீன் கலக்காத மற்றும் தூள் உப்பை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உணவுக்கு பயன்படுத்தப்படும் 250 மெற்றிக் தொன் தூள் உப்பு இன்று செவ்வாய்க்கிழமை (5/20/2025) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வரத்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here