கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான சேத மதிப்பீடுகள் நிறைவடைந்த மாவட்டங்களில் தற்போது இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படுகின்றன.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் பிற மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here