நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடுவெல வெலி – போதிய பகுதிக்கு அருகில் ஒருவர் கால்வாயில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
நவகமுவ காவல்துறையினர் அவரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று (11.10) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, குறித்த பகுதியில் 239 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








