சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட கச்சாய் ஊர் எல்லை பகுதியில் இளைஞர்கள் மற்றும் நகரசபையின் வழிகாட்டுதலுடன் வெள்ள நீர் இருநாட்களுக்கு மேலாக வெளியேற்றபட்டு வருகின்றது.

கச்சாய் ஊர் எல்லை 523 ஆம் படையணி முகாம் அண்மையாக அமைந்துள்ள சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த வெள்ள வடிகால் நகர சபையின் அனுமதியுடன் பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் முன்மாதிரியாக கடலுக்கு  வெளியேற்றபட்டுவருகின்றது.

கடந்த மூன்று நாட்களாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெள்ளம் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here