2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேபணைகளைச் சமர்ப்பிக்க பிற்பகல் 1.30 வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.








