ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நீதியமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நாவலில் உள்ள அவரது இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீரவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இன்று இந்த கையொப்பம் இடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








