காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த ஓமான் பிரஜை ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அலீம் சபி என்ற 35 வயதுடைய ஓமான் பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் நுவரெலியாவிலிருந்து காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here