நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் சிறுவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக ‘இன்ஹேலர்’ களை பயன்படுத்த வைத்தியர்கள் பரிந்துரைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதற்கு அடிமையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும், ஆனால் அது அவ்வாறு இல்லை என்றும், பெரியவர்கள் புகைப்பிடிக்கின்றமையே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் மழை மற்றும் காலநிலை இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here