ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் காவல் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, அதில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
6 கஞ்சா சேனைகளில் 85,000 க்கும் மேற்பட்ட பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4 சிறிய நாற்றங்கால்கள் உள்ளன.இவை அனைத்து செடிகளும் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பேகமுவ மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த சுற்றிவளைப்பு ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (03) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.








