அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவு, வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை போல்ரூமாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் அடையாளமாகவும், ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் கருதப்படும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்த பகுதியை போல்ரூம் அமைக்க வேண்டும் என அறிவித்து வந்தார். தற்போது ரூ.2200 கோடி செலவில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப், “நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதியும், வெள்ளை மாளிகை வளாகத்தில் மிகப் பிரமாண்ட விருந்துகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்காக மக்களை தங்க வைக்க ஒரு போல்ரூம் வேண்டும் என்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக கனவு கண்டனர். இந்த கனவை வரி செலுத்துவோரின் எந்த சிரமும் இல்லாமல் செயல்படுத்திய முதல் ஜனாதிபதி நான் என பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.








