இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது படங்களின் மூலம் சிறப்பாக செயற்பட்டு, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவருடைய பாடலுக்கு பல இளம் ரசிகர்களும் உள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி இயக்கும் தனது மூன்றாவது படத்திற்கு கடைசி உலக போர் என்றும் பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்காக ஆதி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இந்த படம் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அனகா நடிப்பதுடன் இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 9ஆம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி தயாரித்து, இயக்கி, நடிக்கும் முதல் படம் இது என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பும் உள்ளது. இந்த எதிர்ப்பார்ப்பை ஆதி பூர்த்தி செய்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.








