மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரட்டுவெல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








