அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் இன்று (05/03/2025) தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.

ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட தாங்கள் தயார் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

தமது முயற்சிகளை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா தம் மீது பழி சுமத்தியும், வரிகளை விதித்தும் அழுத்த முயற்சிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here