கல்கிசை பொலிஸ்  பிரிவுற்குட்பட்ட படோவிட்ட மற்றும் ஒபியன் சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரத்மலானை மற்றும் கல்கிசை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 41 மற்றும் 45 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து 06 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றவரிடம் இருந்து 12 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here