இரத்மலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலேயே சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 11 கிராம் மற்றும் 12 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதான இருவரும் 38 மற்றும் 42 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here