வலஸ்முல்ல – ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வலஸ்முல்ல – ஹொரேவெல, கொஸ்ருப்ப தோட்டத்தில் வசித்து வந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.

குறித்த வீட்டில் அவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், இவ்வாறு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வீடு தொடர்பான வழக்கு விசாரணை, நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here