எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி ரூபா (10 பில்லியன் ரூபா) செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் இது தொடர்பான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போதுள்ள அரசியலமைப்பு நிலவரத்திற்கமைய,, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 86 கட்சிகள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.