உடுதும்பர, கைகவல பகுதியில் ஹீன் கங்கையில் நீராடிய போது 11 வயது பௌத்த துறவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செப்டம்பர் 13ஆம் திகதி இடம்பெற்றதுடன், நீரில் மூழ்கியமை தொடர்பான முறைப்பாட்டை அடுத்து உடுதும்பர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்த சிறுவர் துறவி மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

ஆரம்ப விசாரணைகளில், அன்னதான நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அந்த துறவி உடுதும்பரவுக்கு வந்திருந்தமையும், பின்னர் வேறு சில பௌத்த துறவிகளுடன் ஹீன் கங்கையில் நீராட சென்றமையும் தெரியவந்துள்ளது.

குறித்த 11 வயது துறவி நீராடி கொண்டிருக்கும் போதே நீரில் மூழ்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here