கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை அம்மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதற்கட்டமாக திருகோணமலையில் 348 பாடசாலைகளுக்கு Solar Panel வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல்வேறு பாடசாலைகள் காணப்படுவதாக ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாணத்தில் 1,124 பாடசாலைகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டு மற்றும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here