19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வடிவத்தை மாற்றாது இருப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, இத்தொடர் தொடர்ந்தும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் வடிவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மகளிருக்கான கனிஷ்ட உலகக்கிண்ணம் போன்று இதையும் T20 வடிவில் நடத்த வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here