களனி–வனவாசல–தெலங்காபத்த ரயில் கடவையில், ரயில் சமிக்ஞையை மீறி கடந்து சென்ற ஜீப் வாகனம், ரயிலுடன் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த மந்தகாமி ரயில், ரயில் பாதையில் நுழைந்த ஜீப்புடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்தது. மோதியதையடுத்து, வாகனம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன், வாகன ஓட்டுநர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.






