நியூசிலாந்துடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ‘டக்-அவுட்’ ஆன சர்ப்ராஸ் கான் 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக்அவுட்டாகி 2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்களில் மாதவ் ராவ், நயன் மோங்கியா இதனை சாதித்துள்ளனர்.








