2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு  ஆரம்பமாகியுள்ளது

இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை, பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பிக்கு அல்லது குருமார் அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here